மஹிந்த ஆதரவாளர்களின் வெறியாட்டம்: களத்தில் இறங்கிய அநுர, சஜித்!
காலி முகத்திடலில் நிலவி வரும் அமைதியின்மையை தொடர்ந்து ஸ்தலத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் விரைந்துள்ளனர்.
இன்று முற்பகல் அலரி மாளிகை அருகில் அரச ஆதரவாளர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு அமைதியான முறையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து காலி முகத்திடலுக்கு விரைந்த அரச ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்த கூடாரங்களை தகர்த்தெறிந்து கலகத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டு நிலைமை தீவிரமடைந்தது.
இந்த நிலையில் கலகக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை முன்னெடுத்தனர்.
இந்த மோதலில் இதுவரை காயமடைந்தோர் எண்ணிக்கை இதுவரை 29 ஆக உள்ள நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

