பணமோசடியில் சிக்குவாரா மஹிந்த புதல்வர் நாமல்ராஜபக்க்ஷ!
நிறுவனம் ஒன்றில் 30 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளை விடுவிக்க கோரிக்கை
வழக்கில் அரசு தரப்பு விசாரணை நிறைவடைந்துள்ளதுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200ஆவது பிரிவின் கீழ், தற்காப்பு சாட்சியத்தை அழைக்காமல், பிரதிவாதிகளை விடுவிக்க கோரிக்கை விடுக்கத் தயார் என வழக்கறிஞர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.