மங்களவின் மறைவால் அதிர்ச்சியடைந்த மகிந்த
சிரேஸ்ட தலைவர் ஒருவரை இலங்கை இழந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு பற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.
மங்கள சமரவீர இலங்கை நாட்டு மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மறைவுச் செய்தியை கேட்டதன் பின் தாம் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ள பிரதமர் மஹிந்த, இலங்கை நாட்டிற்காக அவர் செய்த பணிளுக்காக தாம் நன்றிகூற கடமைப்பட்டிருப்பதாகவும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
I am deeply saddened to hear of the untimely passing of my friend & colleague Mangala Samaraweera. Today we have lost a great leader, a man who loved this nation. I thank him for his service to #lka. My condolences to his family. May he attain the supreme bliss of Nibbhana.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 24, 2021