கிரிகெட் விளையாடும் மஹிந்த ராஜபக்க்ஷ!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கிரிக்கெட் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்களுடன் மஹிந்த ராஜபக்க்ஷ, நுவரெலியாவில் கிரிக்கெட் விளையாடும் காணொளியே வெளியாகியுள்ளது.
எனினும் கோல் போடமுடியாது மஹிந்த மண்கவ்வியபோதும், இறுதியில் கஸ்ரப்பட்டு ஒரு கோல் அடித்துள்ளார்.
அரசியலில் இருந்து ஓரம்கட்டப்பட்டுவிட்ட மஹிந்த நீண்ட நாடகளின் பின்னர் பொது வெளிக்கு வந்து கிரிக்கெட் விளையாடிய காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
அதேவேளை மஹிந்த ராஜபக்ஷ சவால் செம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப் போட்டி இன்று (12) நுவரெலியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி, முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ஷ, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மன உள்ளிட்டோர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டனர்.