மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிங்கம் ; மனோஜ் கமகே
மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிங்கம் என்பதை சரத் பொன்சேகா புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முழு இராணுவத்தையும் காட்டிக் கொடுத்தவர்
சரத் பொன்சேகாவுக்கு சிங்கம் மற்றும் சிறுத்தையைப் பற்றி பாடமெடுக்க வேண்டியுள்ளது. சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது என்பதை சரத் பொன்சேகா புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிங்கம் வயதாகிவிட்டாலும் அல்லது நோய்வாய்ப்பட்டாலும், அது ஒருபோதும் புல்லை உண்ணாது. சிறுத்தை ஒரு மாமிச உண்ணி என்று அழைக்கப்பட்டாலும், சில சமயங்களில் மரங்களின் பட்டைகளை உட்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு சமூகத்தில் இருக்கும் இடத்தை சரத் பொன்சேகா புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம இல்லத்திலிருந்து அனுப்பிய பிறகும், மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை எந்த தயக்கமும் இல்லாமல் பார்க்கச் செல்கின்றனர்.
விஜேராம இல்லத்தை விட்டு தங்காலைக்குச் சென்ற முதல் இன்றுவரை வருகை தரும் மக்கள் கூட்டம், சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பேரணிக்கு வந்த கூட்டத்தைப் போன்றவர்கள் என்பதை சரத் பொன்சேகா புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தநிலையில், போர் முடிந்து சிறிது நேரத்திலேயே, இந்த நாட்டின் முழு இராணுவத்தையும் காட்டிக் கொடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிட வேண்டும் என்று கூறுவதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.