காலிமுகத்திடல் தாக்குதலில் மஹிந்த புதல்வரா; வெளியான பகீர் தகவல்!
காலிமுகத்திடல் தாக்குதலில் மஹிந்த புதல்வர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த தாக்குதல் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்தவின் புதல்வர்களில் ஒருவரான யோசித ராஜபக்சவின் வாக்குமூலம் முக்கியமானது என புலனாய்வுத்துறையை கோடிட்டு வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் யோஷித ராஜபக்சவை விசாரணை செய்தால், காலிமுகத்திடல் தாக்குதல் சதித்திட்டம் பற்றிய முழுமையான செய்திகள் தெரியவரும் என புலனாய்வு தரப்புக்கள் நம்புகின்றன.
அதேவேளை சம்பவம் இடம்பெற்ற அன்று முற்பகலில் அவர் அவசரமாக சிங்கப்பூர் விமானத்தில் ஏறி அவுஸ்திரேலியா சென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் யோசித ராஜபக்ச அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்தாலும், அது தவறானது என்றும் உளவுத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் 10 May 2022 அன்று ஊடறுப்பு நிகழ்ச்சியில் இராணுவ ஆய்வாளர் அருஸ் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.