அரசியலுக்கு டாட்டா காட்டும் மகிந்த!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அதேவேளை பசில் ராஜபக்க்ஷவும் அரசியலில் இருந்து ஒதுங்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், தற்போது மஹிந்த ராஜபக்ஷவும் ஓய்வு பெறத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video