யாழில் மஹிந்தவை தூக்கியெறிந்த கடைக்காரர்!
யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மஹிந்த ராஜபக்ஷவின் முகம் பொறித்த ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை ஏற்கமறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற நபர் ஒருவர் மஹிந்த ராஜபக்ஷவின் முகம் பொறித்த ஆயிரம் ரூபா தாளை கொடுத்தபோது அதனை ஏற்க அங்கிருந்தவர்கள் மறுத்துள்ளனர்.
அத்துடன் ‘மஹிந்த குடும்பத்தின் முகம் உள்ள காசு இங்கே ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மஹிந்தவே வீட்ட போகப் போகிறார். இந்த காசு இங்கே ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தயவு செய்து காசை எடுத்துச் செல்லுங்கள்’ என கூறப்பட்டதால் அந்த இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதை அடுத்து அந் நபர் ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக நாடுபூராகவும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.