குறைவான விலைக்கு முட்டையை வாங்கி மகிழ்ச்சியடைந்த அமைச்சர்!
கொழும்பு மற்றும் கம்பஹாவில் இன்றைய தினம் (28-12-2022) 55 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) பத்தரமுல்லையில் மலிவான முட்டைப் பொதி ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
இலங்கை சந்தையில் முட்டையின் விலை 65 – 70 ரூபாவாக அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, 55 ரூபா விலையில் நுகர்வோருக்கு முட்டை விற்பனையை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய, கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் முட்டை விற்பனை செய்யும் பணிகள் இன்று ஆரம்பமாகின.
10 லொறிகளில் 10 இடங்களில் 04 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாதம் 30ஆம் திகதி காலி மற்றும் கண்டி நகரப் பகுதிகளில் முட்டை விற்பனை செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.