வெடுக்குநாறிமலையில் அமைதியாக இடம்பெற்ற சிவராத்திரி பூஜை
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது.
சிவராத்திரி தினமான நேற்று (26) மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றதுடன் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
கடமையில் பொலிஸார்
அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். அதேசமயம் காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.
யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி
அதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள சிவன் ஆலயங்கள், மற்றும் பல ஆலயங்களிலும் சிவராத்திரி விழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.




