வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வீடு தேடி வர எளிமையான வழிபாடுமுறை
அன்னை லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்பாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை, எல்லாவகை செல்வங்களையும் கொண்டு வந்து சேர வெள்ளிக்கிழமையான இன்று லட்சுமி வழிபாடு மிக சிறந்த நாளாக அமையும்.
வாழ்க்கையை நிம்மதியாக வாழ இறையருள் தேவை. இறையருள் இருந்தால், வாழ்த்தைக்குத் தேவையான வளங்கள் அனைத்தும் தடையறக் கிடைக்கும்.
இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது பணம் என்றாலும், பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல, கடவுளின் ஆசியே அனைத்திற்கும் அடிப்படையாகிறது.
இறையருள் பெறவும், நிம்மதியாய் வாழவும் தினசரி என்ன செய்ய வேண்டும் என்பதற்கான புரிதல் ஆளுக்கு ஆள், வாழும் விதம் என பல விஷயங்களின் அடிப்படையில் மாறுபடும். இருப்பினும், சில பொதுவான வழிமுறைகளை தெரிந்துக் கொள்வோம்.
வீட்டில் தொடர்ந்து செல்வமும், நிம்மதியும் வந்து சேர்வதற்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் தேவை. வருமானத் தடைகள் நீங்கி, பொருளாதாரம் உயர்ந்து, செல்வ மழை பொழிய செய்யக்கூடிய எளிய பரிகாரங்களைத் தெரிந்துக் கொள்வோம்
பிரம்ம முகூர்த்தத்தில் விடியலில் எழுபவர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கும், காலையி எழுந்ததும், விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் நாளடைவில் வந்து சேரும். பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியாவிட்டாலும், சூரிய உதயம் ஆன பிறகாவது எழுந்து விளக்கேற்ற வேண்டும்
காலையில் எழுந்தவுடன், வாசல் கூட்டி பெருக்கி, கோலம் போட்டுவிட்டு, பூஜை அறையில் அன்னை லட்சுமியின் முன் பணத்தை வைத்து வணங்க வேண்டும்
பணத்துடன், மணம் தரும் மல்லிகைப்பூ, ஏலக்காய், பச்சை கற்பூரம், சந்தனம், வில்வ இலை ஆகியவற்றையும் வைக்க வேண்டும்.
மகாலட்சுமி படம் வைத்து அதற்கு முன்பாக விளக்கேற்றி வழிபட வேண்டும். இது, அன்னை லட்சுமியின் அருளைத் தரும் சுலபமான வழிபாடு... தடையின்றி தனம் பெற எளிமையான வழிபாடு