மகா சிவராத்திரியில் சிவ யோகம் பெற போகும் ராசிக்காரர்கள்
மகா சிவராத்திரி ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது அனைத்து ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரும். எனினும், சிவபெருமானின் ஆசிர்வாதத்தால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன.
2025 ஆம் ஆண்டு மகாசிவராத்திரியில், 26 ஆம் திகதி சிவயோகம் தொடங்கும். இந்த சிவ யோகத்தின் தாக்கத்தால், எந்த 5 ராசிக்காரர்கள் சிவபெருமானின் சிறப்பு அருளால் பல வித நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்று ரிஷபம். இது சிவனின் வாகனமான நந்தி பகனாவுடன் நேரடியாக தொடர்புடையது. இந்த மகாசிவராத்திரியில் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக ஒரு தொழிலைத் தொடங்க திட்டமிட்டு வருபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். சிவ பெருமானை வேண்டி தொழில் தொடங்கினால் வெற்றிகரமாக வியாபாரம் நடக்கும். சிவ யோகத்தின் செல்வாக்கால், உங்கள் நிதி நிலைமை மேம்படும். செல்வச்செழிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வர் வடிவத்துடன் தொடர்புடைய மிதுன ராசிக்காரர்கள், இந்த மகாசிவராத்திரி அன்று சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். சிவ யோகத்தில், மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
கடகம்
சிவபெருமான் தலையில் அணிந்திருக்கும் சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள், இந்த மகாசிவராத்திரி அன்று சிறப்புப் பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த சிவ யோகத்தில், கடக ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். மேலும் வணிகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். கல்வித் துறையில், குறிப்பாக வெளிநாட்டில் படிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
சிவபெருமானின் வில்லுடன் தொடர்புடைய தனுசு ராசிக்காரர்கள், இந்த மகாசிவராத்திரி அன்று சிவயோகத்தின் தாக்கத்தால் புதிய மற்றும் நன்மை பயக்கும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். நிதி சிக்கல்கள் தீர்ந்து பொருளாதார நிலை முன்னேறும். அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்க இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.
கும்பம்
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான மற்றொரு ராசி கும்பம். மகா சிவராத்திரியில் உருவாகும் சிவ யோகத்தால், கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் மூன்று மடங்கு பலன் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வ்வாய்ப்புள்ளது. வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியிம் இருக்கும். வியாபாரம் விருத்தி அடையும்.