மகா கந்த சஷ்டி விரதம் 2025 ; அற்புதம் புரியும் அழகன் கந்தனின் அருள் பெற இப்படி வழிபடுங்க!
அனைத்து பக்தர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல விரத நாள் கந்த சஷ்டி விரதம் ஆகும். இந்த வருடத்தின் கந்த சஷ்டி விரதம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. 22.10.2025 முதல் 27.10.2025 வரை கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டிக்கு மகா சஷ்டி என்ற பெயர் உண்டு இதுவே கந்தசஷ்டி என்று கூறுகிறோம். இத்தனை சிறப்பு பெற்ற இந்த மகா கந்த சஷ்டி விரதத்தை எப்படி இருக்க வேண்டும், கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்
காப்பு கட்டுதல்
கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள் அன்று காலை 6 மணிக்கு உள்ளாகவே விரதத்தின் காப்பு கட்டுதலை செய்துவிட வேண்டும். விரதத்தை ஆரம்பிக்கும் போது முருகன் படத்தின் முன் ஒரு கலசம் வைத்துக்கொண்டு அதில் வாசனை திரவியங்களை போட்டு, ஒரு ரூபாய் நாணயம் வைத்து, ஒரு எலுமிச்சை பழம், மாவிலை வைத்து, தேங்காய் வைத்து, மஞ்சள் குங்குமம் வைத்து கலசத்தை தயார் செய்து அதனை பச்சரிசியின் மேல் வைத்து காலை 6 மணிக்குள் இதனைத் தொடங்கி விட வேண்டும்.

இந்த கந்த சஷ்டி விரதம் இருப்பதால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும். திருமண வரத்திற்கு கந்த சஷ்டி விரதம் இருக்கலாம். கடுமையான நோய் இருப்பவர்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கலாம்.
செல்வம் பெருக, வாழ்க்கையில் பிரச்சனை உள்ளவர்கள், தொழில் விருத்தி அடைய போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த கந்த சஷ்டி விரதம் நிச்சயம் பலன் அளிக்கும் என்று பக்தர்கள், ஆன்மீக தகவல்கள் தெரிவிக்கின்றன.