தமிழக அரசியலில் மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனை; முதலமைச்சர் விஜய் படைத்த சாதனை!
தமிழக இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன.
மதுராந்தகத்தில் தவெக 53,590 வாக்குகள் பெற்று அபார முன்னிலை பெற்றுள்ள நிலையில், திமுக 38,666 வாக்குகளுடனும் அதிமுக 34,102 வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன.

மறைமுக கூட்டணி வியூகங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்த 'விசில்'
அதேபோல், தாராபுரம் தொகுதியிலும் தவெக 54,354 வாக்குகளை அள்ளிக் குவித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இங்கு திமுக 45,701 வாக்குகளையும், அதிமுக 35,411 வாக்குகளையும் மட்டுமே பெற முடிந்தது.
இரு திராவிடக் கட்சிகளின் பண பலம், அதிகார பலம் மற்றும் மறைமுக கூட்டணி வியூகங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து 'விசில்' சின்னம் இரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றி மூலமாக, இனி தமிழகத்தில் தவெகவை வீழ்த்துவது திமுக மற்றும் அதிமுகவால் இயலாத காரியம் என்பது தெள்ளத்தெளிவாக நிரூபணமாகியுள்ளது.
50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் மாற்றத்தை விரும்பி தலைவர் விஜய்யின் பக்கம் அணிவகுத்து நிற்கின்றனர் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகளே சான்றாகும்.