காதலிக்காக தனிஷ்க் நகைக்கடை கொள்ளை; பொறிவைத்து தூக்கிய பொலிஸார்!
தமிழகத்தில் மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 11 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில் மதுரையை சேர்ந்த நிஷாந்த் என்கிற வாலிபர் தனது பெண் தோழி மற்றும் யுடியூபர் மீனாட்சி என்பவருக்காக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மீனாட்சி மற்றும் நகைகளை பதுக்க நிஷாந்துக்கு உதவிய அவரின் தந்தை இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் நிஷாந்த் தலைமறைவானார்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகை
நேற்று பெங்களூரிலிருந்து ஆம்னி பேருந்த்தில் நிஷாந்த் சேலம் சென்றபோது தர்மபுரியில் போலீசார் அவரை கைது செய்தனர்.
ஏற்கனவே மீனாட்சி காட்டிய இடத்திலிருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது நிஷாந்தை அழைத்து சென்று அவர் பதுக்கி வைத்திருந்த 6.2 கிலோ நகைகளையும் காவல்துறை மீட்டுள்ளது.
ஏற்கனவே நகைகள் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் அந்த நகை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து நகைகளும் மீட்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று நடைபெற்று வருகிறது.
கைதானவரை டிசம்பர் 1ம் தேதி வரை நிஷாந்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.