மாவீரர் துயிலுமில்லங்களில் கண்ணீருடன் குவிந்த உறவுகள்; தாயகம் எங்கும் சோகம்
தாயகத்திற்காய் தங்க்கள் உயிர்களை ஆகுதியானவர்களை வருடம் தோறும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது. அந்தவகையில் இன்னும் சற்று நேரத்தில் மாவீரர் அஞ்ச்சலி நிகள்வுகாள் ஆரம்பமாகவுள்ள நிலையில் துயிலுமில்லங்களில் கண்ணீருடன் உறவுகாள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கான நினைவுகூறும் பொதுநாளக 1989 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கண்ணீருடன் குவிந்த உறவுகள்
நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் மாவீரர்களை நினைவுகூரும் வாரம் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டு 27ஆம் திகதி நிறைவடையும்.
அந்தவகையில் வடக்கு,கிழக்கில் இம்முறை நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் மாலை 6.05மணிக்கு நினைவொலி எழுப்பபட்டு, 6.06மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படும்.
தொடர்ந்து 6.07இற்கு ஈகை சுடர் ஏற்றப்படுவதோடு துயிலுமில்லப்படல் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்திலும் விசேட அஞ்சலிகள் இடம்பெறவுள்ளன.
நேரலை காணொளி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் 2026