மனைவியால் பணக்காரராகும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு தான் ; உங்க ராசியும் இருக்கா?
வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில், ஜோதிடத்தின்படி, சில ராசிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு மனைவியால் அதிர்ஷ்டமும், பணக்கார யோகமும் வீடு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.

அது எந்தெந்த ராசிகள்
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பர வசதியையும் பெறுவதற்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசி ஆண்கள் நிதியை வளர்க்ககூடிய துணையை பெறுவார்கள். இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை என்றால் பிடிக்கும். இதன் காரணமாக இவர்கள் பணக்கார பெண்களை ஈர்ப்பார்கள். இவர்கள் எப்போது நிதி ரீதியாக பலமாக இருக்க வேண்டும் என்பதை நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் அதிகாரம் மற்றும் அந்தஸ்து மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்கள். இவர்களை சுற்றியுள்ளவர்கள் எப்போதும் செல்வந்தராக இருப்பார்கள். இவர்களுக்கு ஆடம்பரம் என்றால் பிடிக்கும் அதற்காக செலவு செய்வார்கள். நிதியில் பலமாக இருக்க ஆசைப்படுவார்கள். இதன் காரணமாக இந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்க வாய்ப்புள்ளது. மனைவி மூலம் இவர்களுக்கு நிதி பிரச்சனை வராது. மேலும், இருவரும் சேர்ந்து அதிக வருமானத்தை ஈட்டுவார்கள்.
துலாம்: துலாம் ராசியைச் சேர்ந்த சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டாலும், தங்களது துணை வந்த பின்பு அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி குடியிருந்து, அனைத்து நிதி ரீதியான பிரச்னையையும் தீர்த்து வைப்பாராம். மேலும், திருமண உறவில் சமநிலையையும், அன்பையும் உருவாக்குவார்கள். இவர்கள் தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். இதன் காரணமாக, துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்கும் என கூறப்படுகின்றது.
மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தருக்கு அதிகாலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ; போதையில் அரங்கேறிய கொடூரம்
மகரம்: மகர ராசிக்காரர்கள் உயர்ந்த பதவிகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள். வாழ்க்கையை பொறுப்பாக வழிநடத்தும் குணம் கொண்டவர்கள். மிகவும் அமைதியாகவும், நிதானமாக இவர்கள் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை மதிப்பார்கள். எடுக்கும் முடிவுகள் குறித்து அவர்களிடமும் கலந்து ஆலோசிப்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய தெளிவான சிந்தனை இருக்கும்.