லங்கா பிரிமீயர் லீக் தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கொழும்பு ஸ்டார்ஸ்!
லங்கா பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய அறையிறுதி போட்டியில் Colombo Stars மற்றும் Kandy Falcons அணிகள் மோதின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Colombo Stars அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
Kandy Falcons அணி சார்ப்பில் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க 34 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றார்.
அதனடிப்படையில் Colombo Stars அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் சரித் அசலங்க 68 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
Colombo Stars அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்நிலையில், Colombo Stars அணி நாளை (23-12-2022) இறுதிப் போட்டியில் Jaffna Kings அணியை எதிர்கொள்ளவுள்ளது.