நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
கம்பஹாவில் உள்ள பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் உள்ள நீர் விநியோக குழாய் திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வத்தளை, மாபோல, ஜா எல மற்றும் கட்டுநாயக்க -சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் வத்தளை, பயகம, மஹர, ஜா எல, கட்டான மற்றும் மினுவாங்கொட உள்ளுராட்சி சபை பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும், உயர் இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நாளை நண்பகல் 12 மணியளவில் நீர் விநியோகம் சீரமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நுகர்வோர் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.