காதலர்கள் வாடகைக்கு: பிரத்யேக இணையதளத்தை அறிவித்த பிரபல நாடு!
காதலர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ள பிரத்யேக இணையதளத்தை ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஜப்பான் நாட்டில் தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், வாடகைக்குக் காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஜப்பான் அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் ஏராளமான இளைஞர்கள், இணை கிடைக்காமல் மனதளவில் சோர்வடைந்துள்ளதாகவும் இதனால், காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு ஐப்பான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது 1 மணித்தியாலத்திற்கு 3,000 ரூபாவுக்கு காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம்.
இருப்பினும், குறைந்தபட்சம் 2 மணித்தியாலத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இணையைத் தேர்வு செய்யும் இணையதளத்திற்கு முன்பணமும் செலுத்த வேண்டுமாம்.
இதேவேளை, உங்களுக்கான இணையை தேர்வு செய்யக் கூடுதலாக ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும்.
வாடகைக்கு இருக்கும் இணையை நேரடியாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளக்கூடாது. அதற்காகவே இருக்கும் செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.
வாடகைக்கு எடுக்கும் நபர்களிடம் இருந்து எவ்விதமான பரிசுப் பொருட்களையும் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.