தந்தையின் உயிரைப்பறித்த மகளின் காதல்!
மகளின் காதல் தொடர்பால் அவிசாவளை, பதுவத்த பகுதியில் பெண்னின் தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் மகளும் தாக்கப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மகளுடன் காதல் உறவு
இவர்களது வீட்டில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர் மகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் யுவதியை தாக்கியதுடன் , குறுக்கிட்ட சிறுமியின் தந்தையையும் அந்த இளைஞன் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான 60 வயதான தந்தை சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய சந்தேக நபர் அவிசாவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்ஒள்ளப்பட்டு வருகின்றன.