உக்ரைன் போர்க்களத்தில் மலர்ந்த காதல்; வைரலாகும் காணொளி!
ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இன்று 12வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது.
உகரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்ய துருப்புக்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. அந்தவகையில் உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளதுடன், 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது.
இந்நிலையில் கீவ், கார்கிவ் நகரங்களைக் கைப்பற்ற ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
உக்ரைனில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்த போதிலும், தாய்நாட்டை பாதுகாக்க அந்நாட்டு மக்கள் பலர் ராணுவத்தில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். அதேசமயம் 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளபோதும், , பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர வரிசையில் காத்திருக்கிறார்கள்.
This couple, Lesya and Valeriy, just got married next to the frontline in Kyiv. They are with the territorial defense. pic.twitter.com/S6Z8mGpxx9
— Paul Ronzheimer (@ronzheimer) March 6, 2022
இந்நிலையில் ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், ராணுவ சீருடையில் வந்த திருமண தம்பதியான லெசியா மற்றும் வலேரி கையில் பூக்கொத்தை வைத்துத்திருந்தனர். மணமகன் வலேரி லெசியாவிற்கு ஹெல்மெட் மாட்டிவிடும் போது மணமகள் லெசியா புன்னகைத்தபடி வலேரியின் கைகளைப் பிடித்துக் கொண்டுருந்தார்.
சக வீரர்களின் குழு கோரஸாக டூயட் பாடியது,
அதில் ஒருவர் வீணை போல் ஒலிக்கும் உக்ரேனிய நாட்டுப்புற இசைக்கருவியான பாண்டுராவை வாசித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.