யாழில் பொலிஸார் துரத்தியதால் வீட்டின் மதிலை உடைத்து டிப்பர் வாகனம் விபத்து
யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அதிகாலை சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் நிறுத்த சொன்னதும் நிறுத்தாமல் வேகமாக சென்றதல் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சட்டவிரோத மணல்
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
வாகனம் நல்லூர் பின் வீதி வழியூடாக சென்று வீதி வளைவில் திரும்ப முற்பட்ட வேளை வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீடொன்றின் மதிலை உடைத்து , வீதியில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கு உள்ளான வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.