மகனின் கண்முன்னே உயிரை துறந்த தந்தை ; உயிரிழக்கும் முன் செய்த செயலால் நெகிழ்ச்சி
களுத்துறையின் கட்டுக்குருந்த கடற்கரையில் 51 வயதுடைய ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
தனது குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விசாரணைகள்
உயிரிழந்தவர் கட்டுக்குருந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (03) பிற்பகல் கட்டுக்குருந்த கடற்கரையில் தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடன் நீராடச் சென்றிருந்தபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலையில் அடித்துச் செல்லப்பட்ட அவரைக் காப்பாற்ற, அவரது மகனும் மற்றொரு இளைஞரும் அவரை நோக்கி நீந்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அலையின் சீற்றத்தால் இளைஞர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து, தன்னைக் காப்பாற்ற முன்வர வேண்டாம் என்று அவர் இளைஞர்களிடம் சத்தமிட்டதாக அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.