தமிழர் பகுதியொன்றில் விபத்தில் சிக்கிய லொறி ; 650 கோழிகள் உயிரிழப்பு
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே லொறி தடம் புரண்டதால் லொறியிலிருந்த 650 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்ப புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று ( 12) அதிகாலை 4.30 மணியளவில் கோழி ஏற்றிவந்த கப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொலிஸார் விசாரணை
கோழிகளை ஏற்றிக்கொண்டு மட்டு கல்முனை சாலை வழியே கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனம் புதுக்குடியிருப்பு பகுதியூடாக பயணிக்கும் போது வீதியில் நின்ற மாட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்ததோடு கோழிகளும் இறந்துள்ளன.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்