ஆயுளை நீடிக்கும் காய்கறிகள்
காய்கறிகள் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் நன்றாகவே அறிவோம். ஆனாலும் நாம் தினமும் அவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
பெரும்பாலான காய்கறிகள் அத்தியாவசிய வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்தவையாக உள்ளன.
ஆய்வுகளின் படி ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் சில காய்கறிகள் உள்ளன.
கீரை
அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய மிகச்சிறந்த காய்கறி என்றால் அவை இலை கீரைகள்.
கீரைகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இது நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதோடு இதில் போதுமான அளவு வைட்டமின் ஏ மற்றும் கே உள்ளது.
கேரட்
கேரட் கண்பார்வையை ஊக்குவிக்கும். ஏனெனில் அதில் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் ஏ அளவை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
மேலும் அவை புற்றுநோயைத் தடுக்கும் ஆக்ஸிஜனேற்றியான பீட்டா கரோட்டின் இதில் அதிகமாக உள்ளது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி சிலுவை காய்கறி குடும்பத்தின் ஒரு முக்கியமான காய்கறியாகும்.
இந்த காய்கறியில் சல்போராபேன் உள்ளது இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.
மேலும் குறிப்பிட்ட அளவு வைட்டமின் கே மற்றும் சி, ஃபோலேட், மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
கேரட்டைப் போலவே சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் பீட்டா கரோட்டின் உள்ளது. இதிலுள்ள அதிகளவு வைட்டமின் ஏ, புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு உருளைக்கிழங்கு நல்லது. ஏனெனில் இதில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன.
அஸ்பாரகஸ்
தினமும் சாப்பிட வேண்டிய சிறந்த காய்கறிகளில் ஒன்று அஸ்பாரகஸ் தண்டுகளில் கலோரிகள் குறைவாக உள்ளன.
ஆனால் இதில் நிறைய நார்ச்சத்து உள்ளது. அவற்றில் ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே உள்ளது. அஸ்பாரகஸ் கல்லீரலை நச்சுப் பொருட்களிலிருந்தும் பாதுகாக்கும்.
பீட்ரூட்
கலர்புல்லான பீட்ரூட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற காய்கறி இரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோய் மற்றும் நரம்பு பிரச்சனைகளை எதிர்த்துப் போராடக்கூடிய ஆக்ஸிஜனேற்றம் அவற்றில் உள்ளது.
குடைமிளகாய்
ஆரஞ்சுப் பழத்தை விட குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அவற்றில் வைட்டமின் பி-6, ஃபோல்டா மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
குடைமிளகாயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்பார்வையைப் பாதுகாக்க உதவும்.
தக்காளி
தக்காளி உண்மையில் ஒரு பழம் ஆனால் பல நூற்றாண்டுகளாக அது காய்கறியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. தக்காளியில் உள்ள லைகோபீன் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
மேலும் தக்காளியில் ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவும் கலவைகளும் உள்ளன.