பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்....கோரிக்கை விடுத்த லண்டன் பொலிஸ்
வடக்கு லண்டனில் பெண் ஒருவரிடம் மோசமாக நடந்துகொண்டதாக கூறப்படும் நபர் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலெக்ஸாண்ட்ரா பார்க் சாலையில் ரூட் 102 பேருந்தின் மேல் தளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் 30 வயதான பெண் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதியன்று தான் பேருந்திலிருந்து இறங்க முற்பட்டபோது குறித்த நபர் தன்னை தடுத்ததாகவும்.
மேலும் தன்னை பல இடங்களில் தொட்டதாகவும் அந்த பெண் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், “சிசிரிவி காணொளியில் இருக்கும் நபரின் பெயரை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக பெருநகர காவல்துறையின் சாலைகள் மற்றும் போக்குவரத்து காவல் துறையின் பொலிஸ் கான்ஸ்டபிள் நிக் கோர்ட்ரைட் (Nick Kortrigh) தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த நபர் தொடர்பில் தகவல் ஏதேனும் தெரிந்தால் தங்களை உடனே தொடர்புகொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
படத்தில் உள்ள நபரின் பெயரைக் குறிப்பிடக்கூடிய எவரும் 101 ஐ அழைக்றுமாறும் அல்லது 7921/13SEP ஐ மேற்கோள் காட்டி @MetCC ஐ ட்வீட் செய்யுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.