மட்டக்களப்பில் கதவடைப்பு செய்ய அச்சுறுத்திய மாநகர சபை முதல்வருக்கு ஆப்பு!
மட்டக்களப்பில் கதவடைப்பு செய்யுமாற்று வியாபாரிகளை அச்சுறும் பாணியில் எச்சரித்த மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
முடக்கல் போராட்டம்
அதற்கமைய இன்று நண்பகல் 12 மணி வரை வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் குறித்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழரசு கட்சி உறுப்பினரான மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், காலையில் திறக்கப்பட்ட சில கடைகளை மூடுமாறு கூறிய நிலையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கடைகளை திறக்குமாறு குறிப்பிட்ட நிலையில், அவர்களுக்கும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடைகளை மூடுமாறு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதேவேளை இன்றையதினம் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை தமிழரு கட்சி அழைப்பு விடுத்த போதும் மக்கள் அதனை உதாசீனம் செய்து தங்கள் அன்ற்றாட கடமைகளில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் மட்டக்களப்பு நகரில் காலை ஒரு சில கடைகளை தவிர ஏனைய கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், மாநகர சபை எல்லைக்குட்பட்ட சந்தைக் கட்டிடம் பூட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.