உள்ளூராட்சித் தேர்தல்; நீதிமன்றம் இடைக்காலத் தடை
கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரிக்க அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை மே 5 ஆம் திகதி முன் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் ஏதேனும் ஆட்சேபனைகளை மே 7 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதுடன் இதையடுத்து, மனு விசாரணை மே 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் அந்த திகதி வரை தொடர்புடைய இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.