உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது அவ் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இவ் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு இத்தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இக்குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் பங்குபற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.