கோவிலுக்கு சென்றபோது செல்ஃபி மோகம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி
இந்தியா கர்நாடகாவில் காவிரி ஆற்றில் நின்று போட்டோ எடுக்க முற்பட்ட போது, ஒரே குடும்பத்தின் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவிக்கையில், ராம்நகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகாவை சேர்ந்த குடும்பத்தினர், நேற்று மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா முத்தத்தியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தத்தி ராயா கோவிலுக்கு சென்றனர்.

நீரில் இறங்கி, போட்டோ, செல்பி
சுவாமி தரிசனம் முடிந்த பின், முத்தத்தி அருகில் பாயும் காவிரி ஆற்றை பார்க்க, நேற்று மாலை வந்தனர். ஆற்றின் ஆழத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல், நீரில் இறங்கி, போட்டோ, செல்பி எடுப்பதில் ஈடுபட்டனர்.
PTA விரைவில் ரத்து ; குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்; ஜனாதிபதி அனுரகுமார அறிவிப்பு
இதன்போது அவர்களில் ஒருவர் நீரில் விழுத்த நிலையில் அவரை காப்பாற்ற முயற்சித்த நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இறந்தவர்கள் விஜயம்மா, 50, ஸ்வேதா, 38, பிரியங்கா, 28, சைத்ரா, 20, மகேஷ், 22, என்பது தெரிய வந்துள்ளது.
நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சுற்றுலா பயணியர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் பொலிஸார் ஐவரின் உடல்களை வெளியே எடுத்தனர். இந் நிலையில் செல்பி எடுக்க முற்பட்ட போது குடும்பமே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.