தாயின் கொடூர செயலால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட சிறுமி
கிளிநொச்சி - அக்கராயன் பொலிஸ் பகுதிக்குட்பட்ட ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் தாய் ஒருவரின் செயலால் சிறுமி துயர நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தன்று தாய் ஒருவர் சிறுமியை கடைக்கு சென்று அப்பளம் வேங்கை வர கூறியுள்ளார். அந்த வேளையில் சிறுமி அப்பளம் ஒன்றினை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற தாய் சிறுமியின் வாயில் நெருப்பால் சூடு வைத்துள்ளார்.
இந்த நிகழ்வை அவதானித்த சிறுமியின் தாத்தா அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் தாயரைக் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த மேலதிக விசாரணையை பொலிஸார் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.