இலங்கையில் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய சிறுமி ; செய்யும் நெகிழச்சி செயல்
பத்துவயது சிறுமியொருவர் கொழும்பு ரிஜ்வே வைத்தியாசாலைக்காக நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய எலிசா சாமுவேல் என்ற பத்துவயது சிறுமி தனது தாயாரான வைத்தியர் மனூரி சமரக்கோனின் உதவியுடன் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளார்.
கொவிட் மற்றும் டெங்கு
லேடிரிட்ஜ்வே வைத்தியாசாலையி;ன் தீவிரகிகிச்சை பிரிவிற்காக நிதி திரட்டுவதற்கான நிகழ்வு 17- 18 ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
அதேசமயம் சிறுமி எலிசா ஒரேநேரத்தில் கொவிட் மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்டார் என தெரிவித்துள்ள தாயார் லேடிரிட்ஜ்வே வைத்தியசாலையின் மருத்துவர்களும் தாதிமார்களும் கடும் போராட்டத்தின் பின்னர் அவரை காப்பாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று எலிசாவிற்கு பத்துவயது அவர் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றார்,இதற்கு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் மருத்துவர்களும் தாதிமார்களுமே காரணம் என தாயார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நிதி சேகரிப்பு
இந்நிலையில் தன்னை காப்பாற்றிய வைத்தியசாலைக்கு மகள் தன்னால் முடிந்த விதத்தில் ஏதாவது செய்ய தீர்மானித்துள்ளார் எனவும் வைத்தியரான தாயார் தெரிவித்துள்ளார்.
லயனல் வென்ட் அரங்கில் காட்சிக்கு வைக்கப்படும் ஓவியங்கள் ஏலத்தில் விடப்படும் என குறிப்பிட்டுள்ள சிறுமியின் தாயார், கிடைக்கும் பணத்தை மருத்துவமனையின் தீவிரகிசிச்சைபிரிவி;ற்கு கட்டில்கள் மற்றும் மருத்துவஉபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.