மரக்கறி தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்ட ஆபத்தான பொருள் ; இரகசிய தகவலால் சிக்கிய நபர்
பூரணை தினமான இன்று (7) ஹட்டன் - எபோட்சிலி தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய குறித்த தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக விலைக்கு விற்பனை
இதன்போது வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பூரணை தினத்தில் மதுபான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், அதிக விலைக்கு இந்த மதுபான போத்தல்களை சந்தேக நபர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.