பீடி இலையில் வரித் திருத்தம்
பீடி இலை இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிகளினால் அரசாங்கத்திற்கு இழந்த வரித் தொகையை உரிய முறையில் மீளப்பெறுவதற்கு வரித் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பீடி இலை வரி
ஒரு கிலோ பீடி இலைக்கு 5,000 ரூபா அதிக வரி விதிக்கப்படுவதனால் 75% பீடி இலை இறக்குமதி முறைசாரா முறைகளிலேயே நடைபெறுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே 5,000 ரூபாவாக இருந்த பீடி இலைகளின் இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட பீடி ஒன்றிற்கு அறவிடப்படும் 2.00 ரூபா வரி 3.50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பீடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் சிறிய அளவில் பீடி உற்பத்தி செய்யும் நபர்களை பதிவு செய்து சில ஒழுங்குமுறைகளுக்கு உட்படுத்தி அவர்களுக்கு சில கவரேஜ்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பீடித் தொழில் ஒரு சிகரெட் தொழில் என்பதால் அதை பிரபலப்படுத்த அரசு ஒருபோதும் பாடுபடாது அத்தொழிலில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, இழந்த வரித் தொகையை அரசாங்கத்திற்கு மீட்டுத் தருவதையே எதிர்பார்க்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.