கடும் மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று
இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்றிரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும்.
அதேநேரம், களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்.
மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசும்.
மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.