மொரோக்கோ நிலநடுக்கத்தின் முன் வானில் தோன்றிய மர்ம ஒளி! (Video)
மொரோக்கோவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்குமுன் வானத்தில் மர்மமான ஒளி தென்பட்டதக கூறப்படுகின்றது. இது குறித்த காணொளி சமூக ஊடகத் தளங்களில் வைரலாகியுள்ளது.
வானத்தில் திடீரென்று நீல வெளிச்சம் தோன்றுகிறது. சில நொடிகளில் அது மறைகிறது. பின்னர் மீண்டும் ஒளி தோன்றுகிறது.

வைரலாகும் காணொளி
நில நடுக்கம் ஏற்படும் இடங்களில் வானத்தில் அத்தகைய ஒளி தென்படுவது வழக்கம் என்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்புகூட அப்படி ஒளி காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
أحد الأخوان من المغرب الشقيق أرسل لي هذا المقطع الغريب من كاميرا مراقبة لمنزله في مدينة أغادير لحظة وقوع الزلزال…
— إياد الحمود (@Eyaaaad) September 9, 2023
ظهرت ومضات ضوء زرقاء غامضة في الأفق ولا أحد يعرف ماهي.
مع العلم أن هذه الأضواء ظهرت نفسها لحظة وقوع زلزال تركيا وسوريا قبل 7 أشهر.
هل يوجد لدى أحد تفسير؟ pic.twitter.com/q845XXSlYu
18, 19, 20 ஆகிய நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட 65 நிலநடுக்கச் சம்பவங்களில் ஒளி தென்பட்டதாகப் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.
இந்த ஒளியானது சில சமயம் ஒளி மின்னல் வேகத்தில் மறைந்துவிடும்.சில சமயம் அது பல நிமிடங்கள் மிளிரும்.ஒளி பல்வேறு வண்ணங்களிலும் தோன்றுவது உண்டு.

எனினும் அது ஏன் ஏற்படுகிறது என்பது மர்மமாகவே உள்ளது. அதேவேளை மொரோக்கோ நிலநடுக்கத்தில் 3000 இற்கு அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.