காலையில் இஞ்சி சேர்த்து கொண்டால் இத்தனை நோய்கள் அஞ்சி ஓடுமாம்!
பொதுவாக இஞ்சி தமிழர்கள் உணவில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளது. கிச்செனில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு பொருளில் ஒன்றாக இஞ்யும் உள்ளது .
பண்டைய காலம் தொட்டு இதன் மருத்துவ குணம் அறிந்ததால்தான் இதை அதிகம் உணவில் சேர்த்து வருகின்றனர் .
இஞ்சியை காலை வேளையில் சாப்பிட்டால்
இஞ்சியை காலை வேளையில் சாப்பிட்டால் நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் .
ஆஸ்துமா நோயாளிகள் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மூச்சிரைப்பு குறையும் ,
இஞ்சியை பேஸ்ட் செய்து நெற்றியில் தடவி வந்தால் ஒற்றை தலைவலி ஓடியே போய் விடும் .
அதுமட்டுமா?
1.இஞ்சியை மற்ற எந்த நேரத்தையும் விட ,அதிகாலையில் உட்கொள்வதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2.சிலர் டீ மற்றும் வெந்நீருடன் இஞ்சியை சேர்த்து குடிப்பர் .இப்படி சேர்க்கப்படும் இஞ்சி, குமட்டல் மற்றும் காலை சோம்பலை போக்குவதாக கூறப்படுகிறது.
3.சிலர் இஞ்சி, பால், மஞ்சள் மூன்றையும் சேர்த்து சாப்பிடுவர் ,இப்படி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
4.மேலும் காலை உணவில் சிறிது இஞ்சி சேர்த்துக் கொண்டால், வாதநோய், மூட்டுவலி மாயமாய் மறைந்து விடும் ஆற்றல் உள்ளது .
5.சிலர் இஞ்சி சாறு குடிப்பர் ,இப்படி குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும் என்பதுடன் வாயுத்தொல்லை போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்