வீட்டு வாடகை தகராறில் பறிபோன உயிர்; மருத்துவமனையில் தம்பதி
கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் - மனைவி மருத்துவமனையில்
வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, இறந்தவர், கணவன் மற்றும் மனைவியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாகவும், பின்னர் இறந்தவரின் கையில் இருந்த கூரிய ஆயுதத்தைப் பறித்த கணவன், அதே ஆயுதத்தால் இறந்தவரைத் தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் சந்தேகநபரும் அவரது மனைவியும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.