வட மாகாண ஆளுநருக்கு பறந்த மின்னஞ்சல் கடிதம்!
இலங்கையில் எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தன்று விசேட விடுமுறை வழங்க ஆவண செய்யுமாறு தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் (Jeevan Thiyagaraja) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது கையொப்பத்துடன் இன்று (26.7.2022) மதியம் வடக்கு ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாளை வியாழக்கிழமை (28.7.2022) ஆடி அமாவாசை தினம். சைவமக்கள் தந்தையை நினைந்து பிதிர்க்கடன் செய்யும் முக்கியமான விரத வழிபாட்டு நாள்.
இந்நிலையில், பாடசாலைகள், திணைக்களங்கள் வியாழக்கிழமை விடுமுறை வழங்கி ஏனைய தினத்தில் கடமைகளை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு சைவமக்கள் சார்பில் அன்புடன் வேண்டுகின்றேன் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது