திருக்குமார் நடேசன் ரணிலிற்கு எழுதிய கடிதம் ; அம்பலப்படுத்திய பன்டேரா பேப்பர்!
திருக்குமார் நடேசன் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிற்கு 2016இல் எழுதிய கடிதத்தையும் தனது ஆதாரங்களின் ஒரு பகுதியாக பன்டோரா பேப்பர் பகிரங்கப்படுத்தியுள்ளது.
அக்காலப்பகுதியில் திருக்குமார் நடேசன் மல்வான பங்களா தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். திருக்குமார் நடேசன்கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்படுவதற்கு சிலநாட்களிற்கு முன்னர் இந்த கடிதத்தை அவர் முன்னாள் பிரதமருக்கு எழுதியுள்ளார்.
திருக்குமார் நடேசன் தான் அப்பாவி என தெரிவித்து கடிதமொன்றை இவ்வாறு எழுதினார் என ஐசிஜே தெரிவித்துள்ளது. தனது நிலத்தில் பசில் ராஜபக்ச வீடொன்றை கட்டினார் என்பது ஊடகங்களில் வெளிவரும் வரை தனக்குதெரியாது என குறிப்பிட்டுள்ள திருக்குமார் நடேசன், தனது பெயருக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அந்த நிலத்தை விற்பனை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு நான் சட்டவிரோத நடவடிக்கை எதிலும் முறையற்ற நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை ஈடுபடவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் எனக்கு நீதி வழங்கவேண்டும் என திருக்குமார் நடேசன் முன்னாள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தஎன்னுடைய பணப்பரிமாற்றங்கள் வெளிப்படையானவை எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
https://jvpnews.com/article/nirupama-husband-trouble-special-talk-secret-1633415358