எமக்கு விடுதலை கிடைக்குமா? தமிழகத்தில் இருந்து வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு கடிதம்!
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் வடக்குகிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
தமக்கு விடுதலை கிடைக்குமா இல்லையா என்ற கேள்வியோடு ஒவ்வொரு நாளையும் மிகுந்த சிரமத்தோடு கழித்துவருவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அந்த கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொதுமன்னிப்பு அடிப்படையில் எங்களை விடுதலை செய்து நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு தமிழக அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் திருச்சி சிறைமுகாமில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள நாங்கள் ஒன்பது பேரும் இலங்கையில் இருந்து கடவுச்சீட்டு பெற்று சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்தவர்கள் .
நாங்கள் நுழைவுச்சீட்டு காலம் முடிவடைந்தது மற்றும் வாழ்வாதார உதவி பெறமுயன்றமைக்காக கைதுசெய்யப்பட்டு இரண்டு வருடங்களாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இங்கு எங்கள் குற்றத்திற்குரிய தண்டனைக்காலம் ஆறுமாதம் முதல் ஒருவருடம் மாத்திரமே ஆனால் நாங்கள் எந்தவித நீதிமன்ற நடவடிக்கைகளிற்கும் கொண்டு செல்லப்படாத நிலையில் திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ளளோம்.
இந்த நிலையில் எமக்கு விடுதலை கிடைக்குமா இல்லையா என்ற கேள்வியோடு ஒவ்வொரு நாளையும் மிகுந்த சிரமத்தோடு கழித்துவருகின்றோம். எமது விடுதலையை வலியுறுத்தி 50 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம் அவ்வேளை எம்மில் சிலர் விரக்தியின் உச்சத்தில் உயிரை மாய்த்துக்கொள் முயன்ற சம்பவங்களும் இடம்பெற்றன.
இந்நிலையில் எம்மை எமது நாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆவணசெய்யவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் பொதுமன்னிப்பு அடிப்படையில் எங்களை விடுதலை செய்து நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு தமிழக அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யுமாறும் அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
