மன்னார் மடு தேவாலய வீதியில் உலா வரும் சிறுத்தை புலிகள் ; அவதானம் மக்களே
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி மடு சந்தியில் இருந்து மடு தேவாலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் இரண்டு சிறுத்தை புலிகள் நடமாடி வருவதாக நேரில் அப்பிரதேச மக்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுத்தை புலிகள் நடமாட்டம் தொடர்பாக காணொளிகளும் வெளியாகி உள்ளது.

அவதானம்
கடந்த சில தினங்களாக மடு சந்தியில், இருந்து மடு தேவாலயத்திற்கு செல்லும் வீதிக்கு அருகில் காணப்படும் இந்த சிறுத்தை புலிகள் மனித நடமாட்டத்தை கண்டு அச்சமின்றி காணப்படுவதாகவும், வாகனங்களுக்கு அருகிலும் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இரவு நேரங்களில் மடுத்திருத்தலத்திற்குச் செல்லும் பக்தர்கள், பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு நேரில் கண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவையற்ற வகையில் வாகனங்களை நிறுத்தி சிறுத்தைகளைப் பார்ப்பதையோ புகைப்படம், வீடியோ எடுப்பதற்காக அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.