எம்ஜிஆருக்கு வில்லியாக நடித்த ஒரே ஹீரோயின்; பழம்பெரும் நடிகை காலமானார்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஹீரோயினாகவும், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் இணைந்த நடித்தவருமான பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சி.ஐ.டி. சகுந்தலா பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
எம்ஜிஆருக்கு வில்லியாக நடித்த ஒரே ஹீரோயின்
ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சி.ஐ.டி. சகுந்தலா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. தமிழகத்தில்ன் சேலத்தை சேர்ந்த சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார்.
1960-ம் ஆண்டு 'கைதி கண்ணாயிரம்' என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
அதேவேளை எம்ஜிஆருக்கு வில்லியாக நடித்த ஒரே ஹீரோயின் என்ற பெருமை பெற்றவர் பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா ஆவார்.