சஜித் அலுவலகம் மீது முட்டைவீச்சு
! ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக வளாகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், சஜித் அலுவலகம் மீது முட்டைவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தது என்பதை கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டம் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் மீது முட்டைகள் வீசப்பட்டதோடு வாகனங்கள் மற்றும் கைகளில் சில பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பதற்றமான சூழ்நிலையை அடுத்து, மதுர விதானகே தலைமையில் குழு அங்கிருந்து கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.