திருகோணமலையிலும் சட்டத்தரணிகள் வேலை நிறுத்தம்!
திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பட்டால் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (7) ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலும் அலுவலகத்திலும், சட்டத்துக்கு புறம்பான வகையில் பொலிஸாரினால், மேற்கொண்ட சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிகரிப்பு இடம் பெற்றது.
காலை 9 மணி தொடக்கம் 10 மணி வரை திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால், சட்டத்தரணிகள் ஒன்று கூடி, தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்துக்கு புறம்பான சோதனை நடவடிக்கைக்கு எதிராகவே, அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
எவர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அதற்கு நீதிமன்றத்தின் ஊடாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆனால் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விடயம் பொலிஸாரின் அடாவடித்தனத்தை எடுத்துக்காட்டுவதாக, பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.