சுமந்திரனின் வலது கரத்தை கிழித்து தொங்கவிட்ட குருசுவாமி
1986 ஆம் ஆண்டு மே 6 திகதி இயற்கை எய்திய தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீசபாரத்தினம் அவர்களின் நினைவுதினத்தை ரெலோவின் ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் உட்பட பலரால் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வொன்றை தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி சயந்தன் மற்றும் அவர் ஆதரவாளர் கொச்சைப்படுத்தியுள்ளதாக குருசுவாமி சுரேந்திரன் முகநூலில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்தது,
இவர்கள் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் சுமந்திரனின் வலது கரம் மாத்திரம் அல்ல தமிழ் மக்களின் எதிர்காலத் தலைவர்களில் ஒருவராக இந்திய தூதுவருக்கு அறிமுகப்படுத்த சுமந்திரனால் அழைத்து செல்லப்பட்டவர்.
இப்படிப்பட்ட கயவர்களை தலைவர்களாக தமிழினத்தி்ற்கு சுமந்திரன் அடையாளம் காட்டலாமா? தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் அமிர்தலிங்கம் , யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம் ஆகியோர் இயற்கை எய்தியவர்கள் என்றால் தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளுமா?
அடிப்படை மனித நாகரீகமே இல்லாதவர்கள். மற்றவர் பிறப்பையும் இறப்பையும் கேலி செய்யும் குரூர மனநோயாளிகளான இவர்களா இனத்தின் மனித உரிமை பற்றி பேசப் போகிறார்கள்? என முகநூலில் பதிவிட்டுள்ளார்.
