இலங்கையின் 9அவது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்! முழு விபரம்
இலங்கையில் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024 செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்ட 9 நாடாளுமன்றத்தின் காலப்பகுதியில் 167 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
9அவது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு,
வருடம் 2020 அரசாங்க சட்டமூலங்கள் 07 தனியாள் உறுப்பினர் சட்டமூலங்கள் 00
வருடம் 2021 அரசாங்க சட்டமூலங்கள் 30 தனியாள் உறுப்பினர் சட்டமூலங்கள் 00
வருடம் 2022 அரசாங்க சட்டமூலங்கள் 44 தனியாள் உறுப்பினர் சட்டமூலங்கள் 02
வருடம் 2023 அரசாங்க சட்டமூலங்கள் 29 தனியாள் உறுப்பினர் சட்டமூலங்கள் 05
வருடம் 2024 அரசாங்க சட்டமூலங்கள் 36 தனியாள் உறுப்பினர் சட்டமூலங்கள் 14
மொத்தம், அரசாங்க சட்டமூலங்கள் 146 தனியாள் உறுப்பினர் சட்டமூலங்கள் 21
9அவது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் 167
இதற்கமைய 2023ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம்,
2023ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நாடாளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டம்,
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம்,
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டம்,
2023ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்,
2023ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டம்,
2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டம்,
2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம்,
2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டம்,
2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் சட்டம்,
2024ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க பொருளாதார நிலைமாற்றம் சட்டம் உள்ளிட்டவை இக்காலப் பகுதியில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிடத்தக்க சட்டங்களாகும்.