குறிஞ்சாக்கேணி - கிண்ணியா இடையே இயந்திரபடகு சேவை ஆரம்பம்
கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சாக்கேணி பாலம் முழுமையாக உடைந்து, குறிஞ்சாக்கேணிக்கும் கிண்ணியாவுக்குமான தரைவழித் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மக்களின் போக்குவரத்துக்காக புதிய இயந்திர படகு சேவை ஒன்று இன்று(5) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இயந்திரபடகு சேவை
தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி இணைப்பாளர் எம்.ஈ.எம்.ராபிக், வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அஷ்ரப் இம்ரான் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தரிவித்த தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி இணைப்பாளர் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த சேவையை பாராட்டி இதனால் பயணிக்கும் பொது மக்களும் பல்வேறு தங்களுடைய கருத்துக்களையும் மகிழ்ச்சிகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.