லாஸ்லியா காதலருக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் இவர்தானாம்
இலங்கைபெண்ணான லாஸ்லியாவின் காதலராக இருந்த கவினுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்கள் மட்டுமல்லாது புலம் பெயர் தமிழர்களும் ஆர்வமுடன் பாக்கும் ஓரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.
கவின் - லாஸ்லியா காதல்
ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையர்களும் பங்குபற்ருவதே காரணம். அந்தவகையில் லாஸ்லியா , தர்க்ஷன் , ஜனனி என போட்டியில் கலந்து கொண்டவர்கள் இதனூடாக தமக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்துகொண்டபோது , பிக்பாஸ் வீட்டில் இருந்த கவினுக்கும் அவருக்கும் காதல் என பரவலாக பேசப்பட்டது. தமிழ் நாட்டின் மருமகள் என லாஸ்லியாவை பலரும் கொண்டாடினர்.
எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் இருவரும் ஆளுக்கொரு திசையாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார்.
நண்பியை கரம்பிடிக்கும் கவின்
பிக்பாஸ் போட்டியில் கவின் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதை வென்றார் என்றே கூறலாம். சமீபத்தில் கவின் நடிப்பில் வெளிவந்த டாடா படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
இதை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் கவின், அவரது தோழி மோனிகா என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.